நாடார்களின் கடமையை உணர்த்திய ஸ்ரீ கிருஷ்னர்!

மஹாபாரத யுத்தம் முடிந்தபின் அம்புப்படுக்கையில் இருக்கும் பீஷ்மரிடம் நல்லாசி வேண்டி யுதிஷ்ட்டிரர் சென்றார், அவருடன் சேர்ந்து கிருஷ்னரும் சென்றார். கிருஷ்னரைப் பார்த்த பீஷ்மர், தான் ஏதோ மிகப்பெரும் பாவம் செய்துவிட்டதாகவும், அதனால்தான் இவ்வாராக அம்புப்படுக்கையில் இருந்து கஷ்டப்படுவதாகவும் கூறி, தான் செய்த பாவம் என்ன? என்பதை விளக்குமாறு வேண்டினார்.

ஒரு காலத்தில் அரச சபையில் பாஞ்சாலியை துயில் உரியும்போது, அதை எதிர்க்கவேண்டிய பல அரசர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதில் தர்ம சாஸ்திரங்கள் தெரிந்த, க்ஷ்த்ரிய வர்ணத்தவராகிய பீஷ்மரும் ஒருவர் என்பதை ஸ்ரீ கிருஷ்னர் உணர்த்தினார். மேலும் ஒரு அதர்மம் நடப்பதை பார்த்துக்கொண்டு ஒரு ப்ராமண, வைசிய, சூத்திர வர்ணத்தவர்கள் கண்டுகொள்ளாமல் செல்லலாம். ஆனால் ஒரு க்ஷ்த்ரியன் அதர்மத்தை எதிர்க்க வேண்டும், தர்மத்தை ரட்ஷிக்கவேண்டிய கடமை க்ஷ்த்ரியனுக்கு உள்ளது. என்பதை பீஷ்மருக்கு புரியவைத்தார் ஸ்ரீ கிருஷ்னர்.

தமிழ் நாட்டில் உள்ள க்ஷ்த்ரிய ஜாதியாகிய நாடார், வன்னியர், தேவர் ஆகிய ஜாதியினருக்கு அதர்மம் எனப்படும் அநியாயங்களை தட்டிக்கேட்பது, நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்வது, நாட்டை அந்நியர்களிடமிருந்து பாதுகாப்பது, நடுநிலை மாறாமல் நீதி வழங்குவது, மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தையும், மதத்தின் பெயரால் விபச்சாரத்தையும் பரப்பிவரும் அந்நிய மதத்தினரிடமிருந்து நாடார் சமுதாயத்தையும் அதன் சகோதர, பரிவார சமுதாயத்தினரையும் பாதுகாப்பது போன்ற பல கடமைகள் உள்ளது.

இரவு நேரத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றோரு ஊருக்கு பேருந்தில் யாத்திரை சென்றோமேயானால், பயணிகள் யாவரும் தூங்குவது மனித இயல்பு, தனக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் தூங்குவதைப்பார்த்து ஓட்டுனரும் தூங்கினால் விபரீதம் நடந்துவிடும், அதுமட்டுமல்லாது ஓட்டுனருக்கு பலதரப்பட்ட பயணிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவேண்டிய கடமை உள்ளது. ஓட்டுனர் தூங்கமாட்டார் என நம்பிதான் பயணிகள் பயணிக்கின்றனர். பயணிகளின் நம்பிக்கை நட்ஷத்திரம் ஓட்டுனரே ஆவார்.

பயணிகள் தூங்கினாலும், ஓட்டுனர் தூங்க கூடாது. அது போல பிற சகோதர, பரிவார ஜாதியினர் தவரு செய்தாலும் ஒரு நாடார் தவரு செய்யக்கூடாது. க்ஷ்த்ரிய வர்ணத்தவராகிய நாடார்கள் மேற்படி ஓட்டுனரை போன்றவர்கள். அனைத்து ஜாதியினரையும் சேர்த்து தர்மத்தை ரட்ஷிக்க பிறந்தவர்கள். அனைவரின் நம்பிக்கையும் நம்மேல் உள்ளது. நம்பிக்கையை காப்பாற்றவேண்டியது நாடார் ஒவ்வொருவருக்கும் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *