நாதியற்ற சமுதாயமல்ல நாடார் சமுதாயம், நாம் யாருக்கும் அடிமைகளல்ல

பாண்டிய மன்னனின் ஆட்சி காலத்தில் வைகை அணைகட்டும் பணிசெய்ய அனைத்து ஜாதியினருக்கும் ஆணையிடப்பட்ட போதும், “வலங்கை க்ஷ்த்ரிய மஹாசேனை” என்ற பெயரில் அன்று வாழ்ந்த நாடார் சமூகத்தினர், தான் க்ஷ்த்ரிய வர்ணத்தவர் என்பதால் அடிமைப்பணி ஏதும் செய்ய மறுத்ததோடு, அரச ஆணையையும் துணிவோடு எதிர்த்தனர். பாண்டிய மன்னன் இவர்களில் இருவரை யானையின் காலால் இடறச் செய்கிறான். அப்படியும் இவர்கள் அடிமைப்பணி செய்ய மறுக்கிறார்கள். நாடார் சமுதாயத்தை பகைப்பது பத்ரகாளி அம்மனை பகைப்பது போன்றதாகும் என்பதை உணர்ந்த பாண்டிய மன்னன், பின்னர் பத்ரகாளியின் பகைமைக்கு அஞ்சி இவர்களை விட்டுவிடுகிறான் என்ற வரலாற்றை நாம் தமிழ் இலக்கியங்களிலும், பத்ரகாளியம்மன் கதையின் மூலமாகவும் அறிகிறோம்.

குறிப்பிட்ட காலகட்டத்தில் சில இடங்களில், சில ஜாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து நம்மவர்களை கொடுமைகள் பல நிகழ்த்திய காலம் சென்று, இன்றய காலத்தில் நம்மை கொடுமைப்படுத்தியவர்களாக கூறப்படும் ப்ராமண வர்ணத்தவர்களின் நிலையை நாம் திருக்கோவில்களில் பார்க்கலாம்.

நமது நாடார் ஜாதியினர், ஆபரண அணிகலன் அணிந்து திருக்கோவில் சென்றால், அங்கு திருக்கோவில் மூலஸ்தானத்தில் நிற்க்க வேண்டிய பூஜாரி, திருக்கோவில் ப்ரசாதத்துடன் நம்மவர்களின் அருகே ஸ்ரீ ராமர் முன் ஹனுமன் நிர்ப்பது போல (முதல்வர் ஜெயலலிதா முன் அமைச்சர்கள் நிர்ப்பது போல) நிர்க்கிறார்கள். இவ்வாறாக நாம் பூஜாரிகளை அளவோடுதான் மதிக்கிறோம். ஆனால் கிறிஸ்த்தவர்களோ அளவோடு மதிக்க வேண்டிய பூஜாரியை; பாதிரியார், போதகர், தந்தை போன்ற பல பெயர்களில் அழைப்பதோடு, அவர்களது அடிமைகளாக உள்ளனர். பாதிரியார்கள் சாதாரண கிறிஸ்த்தவர்களை, சுயமாக சிந்திக்க விடுவதும் இல்லை, சுயமாக தேர்தலில் வாக்களிக்க விடுவதும் இல்லை. ஆட்டு மந்தையாகவே நடத்துகிறார்கள். ஒவ்வொரு கிறிஸ்த்தவரும் யாருக்கு ஓட்டுப்போடவேண்டும் என்பதை அவர்களது பூஜாரிதான் முடிவு செய்வார். இவ்வாராக பூஜாரியாகவும், அரசியல்வாதியாகவும் இருந்து மதம் என்ற பெயரில் கட்சி நடத்துபவர்களின் அடிமைகளாக இருப்பவர்கள் எப்படி? நாடார் ஜாதியினராக இருக்க முடியுமென்பதை நாம் சிந்திக்க வேண்டும். நாடார் சமுதாயம் ஒருபோதும் பாதிரியார்களுக்கு அடிமைப்பட்டு கிடக்காது. நாடார் சமுதாயத்தை எவரும் அதிக காலம் அடிமைப் படுத்த முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *