கிறிஸ்தவர்களின் நாடார் விரோத செயல்பாடுகள்

ஆங்கிலேய அரசின் ஆணையின் அடிப்படையில் திருவாங்கூர் மன்னனின் தோள்சீலை மருப்பு செயல், எல்லா ஜாதியினருக்கும் வெருக்கத்தக்கதாகவே இருந்தாலும், இதனை எந்த ஜாதியினரும் எதிர்க்க முன்வராதபோது, தன்னந்தனியாய் அரசை எதிர்த்த சமுதாயம் நாடார் சமுதாயம் ஆகும். அய்யா வைகுண்டசாமி தனது நாடார் சமுதாயத்துக்காக மட்டும் போராடவில்லை இதர 18 சகோதர, பரிவார ஜாதிகளுக்கும் சேர்த்து போராடினார். மன்னனுக்கும் மக்களுக்கும் நடக்கும் இந்த போராட்டத்தை ஆங்கிலேயர்கள் மதம்மாற்றத்திர்க்கு சாதகமாக பயன்படுத்தி, தனக்கு கப்பம்கட்டி வந்த மன்னனிடம் கிறிஸ்த்தவ மதத்திற்க்கு மாறியவர்களுக்கு மட்டும் தோள்சீலை அணிய இருந்த தடையை நீக்க ஆங்கிலேயன் ஆணையிட்டதன் விளைவாக; போராடும் திறனற்ற பலர் நம்மை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயனின் மதமாற்ற வலையில் விழுந்து தனது நாடார் ஜாதியையும், பாரம்பரியத்தையும் விற்றார்கள்.

நான்கு நாடார் சமூகத்தவர் ஒன்றாக நின்று தமக்குள் பேசிக்கொண்டு நிற்க்கும் வேளையில். நம்மவர்களே ஜாதி பற்றி எதுவும் பேசாதநிலையில், கிறிஸ்த்தவர் ஒருவர் அதில் உட்புகுந்து “நாம் எல்லோரும் நாடார் ஆகும்” என்பார். இவ்வாரு கூறும்போது நம்மவர்கள் சிலர் அவரை “ஜாதிப்பற்று” என்று பாராட்டுவார்கள். நாடார்களின் பாராட்டை பெற்ற கிறிஸ்த்தவர் அடுத்த வார்த்தையாக “நம்மை உயர் ஜாதியினர் அல்லது ப்ராமணர்கள் அடிமைப்படுத்திவிட்டார்கள்” என்பார். அதைக்கேட்கும் நாடார்கள் ஆமாம் என தலையசைப்பார்கள். அந்த கிறிஸ்த்தவர் நம்மவர்களிடம் கடைசியாக “நம்மை அடிமைப் படுத்தியவர்களோடு நீங்கள் ஹிந்து மதம் என்ற பெயரில் ஒன்றாக, அவர்களுக்கு அடிமைப்பட்டு உள்ளீகள்” என்று கூறி ஹிந்துவாக வாழ்ந்து வரும் நமது சகோதர, பரிவார ஜாதியினர் மீது, நமக்கு பகையுணர்வை ஏர்படுத்த முயர்ச்சிப்பார்.

கிறிஸ்த்தவர்கள் இதனை அடிக்கடி நாடார் ஜாதியினரிடம் சொல்லிக்காட்டுவது; நமக்கு அடிமைதன்மையையும், தாழ்வுமனப்பான்மையையும் ஏற்படுத்தி, நமது பெருமித உணர்வை இழக்க செய்வதன் மூலம் நம்மை மதம்மாற்ற நினைக்கிறார்கள். ஒரு பெண், ஒரு மோசமான காலகட்டத்தில் கொடியவர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டிருந்தால், நாம் இந்த சம்பவம் மீண்டும் நடக்காமல் தற்காப்பு நடவடிக்கைதான் எடுக்கவேண்டும். அதற்க்கு பதிலாக அந்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் “கற்பழிக்கப்பட்ட பெண்” என கூறுவது அந்த பெண்ணை அவமானப்படுத்துவது போன்றதாகும். தோள்சீலை போராட்டம் முடிந்து பல ஆண்டுகள் ஆனபின்பும் கிறிஸ்த்தவர்கள் நமது ஜாதியை “அடிமைப் படுத்தப்பட்ட ஜாதி” என அவமானப்படுத்தி நமக்கும், நம்மைப்போன்று ஹிந்துவாக வாழும் நமது சகோதர, பரிவார ஜாதியினருக்கும் இடையே பகையுணர்வை ஏற்படுத்தி, அதன்மூலம் நம்மை மதம்மாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *