ஹிந்து தர்மத்தின் அங்கமாகத்திகளும் மொழி, ஜாதி, கலாச்சாரம்

ஹிந்து தர்மத்தின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள குண, கர்மங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நான்கு வர்ணத்திலிருந்து பிற்காலத்தில் பிரிந்தவையே ஜாதிகளாகும். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். நாடார் மற்றும் ஈழவர் சமுதாயத்திர்க்கு பத்ரகாளி, யாதவர்களுக்கு கிருஷ்னர், தேவர் மற்றும் குரவர் சமுதாயத்திர்க்கு முருகர். etc… ஒரு ஜாதியின் குலதெய்வம் மற்ற ஜாதியினருக்கு எதிரி அல்ல. நாம் பத்ரகாளிக்கு வழிபாடு நடத்துவதை நமது சகோதர சமுதாயத்தினர் எவரும் விமர்சிப்பது இல்லை, அவர்களும் நம்மோடு வந்து பத்ரகாளி பூஜையில் நம்பிக்கையோடு பங்கேர்க்கிறார்கள். நாம் நமது பத்ரகாளிக்கு படைக்கும் கருப்பட்டி பணியாரம், பாயாசம், ஓலை கொழுக்கட்டை etc… போன்ற உணவை, கிறிஸ்த்தவர்கள் “சாத்தானுக்கு படக்கப்பட்ட எச்சி” என விமர்சிக்கும் வேளையிலும், அதை ப்ரசாதமாக உட்கொள்பவர்கள் நமது சகோதர, பரிவார ஜாதியினர். அதுபோல சகோதர சமுதாயத்தினரின் குலதெய்வங்களும் ஜாதி பாரபட்சமின்றி நாடார் மக்களுக்கு அருளை வாரிவளங்குகின்றன. இவ்வாராக மதசார்பற்ற ஜாதி என எதுவும் பாரததேசத்தில் இல்லை.

நாம் பேசும் தமிழ் மொழி மதம் சார்ந்ததாகும். தமிழ் மொழியின் தெய்வமாக நம்முடைய முருகன் இருப்பது போல; பாரத தேச மெங்கும் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் பின்னணியிலும் ஒரு ஹிந்து தெய்வம் நிச்சயமாக இருக்கும். பாரத தேச மெங்கும் பேசப்படும் ஒவ்வொரு மொழியும் புனிதம் நிறைந்ததாகும்.

அரபு மொழிக்கு உரிமைப்பட்டவர் முஸ்லீம்கள் மட்டுமே. லத்தீன் மொழிக்கும் அதன் துணை மொழியான ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளுக்கும் உரிமைப்பட்டவர் கிறிஸ்த்தவர்கள் மட்டுமே. எவ்வளவு சரளமாக நாம் ஆங்கிலம் பேசினாலும், நாம் ஆங்கிலேயன் அல்ல. நமக்கென்று ஒரு தாய் மொழியாகிய முருகப்பெருமானின் இனிமையான தமிழ் மொழி உள்ளது. நம்முடைய பாரத தேசம் முழுவதும் உள்ள சகோதர மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் யாவும் நாடார் சமுதாயத்தையும் அதன் சகோதர, பரிவார சமுதாயத்தையும் என்றென்றும் காத்து நிற்க்கும் ஹிந்து தெய்வங்களின் மொழியாகும்.

நாம் ஆங்கிலத்தை பயன்படுத்துவது போல அந்நிய மதத்தினர் நம்முடைய மொழியை தாராளமாக பயன்படுத்தலாம். ஆனால் “நான் ஒரு தமிழன்” என்று தலைநிமிர்ந்து கூறுவதர்க்கான அதிகாரம் படைத்தவர்கள் ஹிந்துக்கள் மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும்.

தமிழ் மொழியானது முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு, 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், 18 சித்தர்கள் உட்பட்ட புலவர் பெரும்மக்களால் வளர்க்கப்பட்டது. இவர்களின் ஆன்மீக ஞானத்தில் நம்பிக்கையற்ற சிலர் அரசாங்க செலவில் அரசு அலுவலகங்களில் “தமிழ் வாழ்க” என்ற பலகையை மட்டும் வைத்துவிட்டு, தமிழை, தான் வளர்த்ததாகவும், வாழவைப்பதாகவும் கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள். சமஸ்கிருத மொழி நமது தமிழைப் போன்றே நம்மை விட்டு பிரிக்க முடியாததாகும். சமஸ்கிருதத்தை ஆரிய மொழி என பொய்கூறி அதனை வெறுக்கும் சிலர் தன்னை அறியாமலே சமஸ்கிருதத்தை பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, “கருணாநிதி” என்பது சமஸ்கிருத வார்த்தை. அதர்க்கு நிகரான தமிழ் வார்த்தை “இறக்கப் பொருள்” என்பதாகும். “உதய சூரியன்” என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை “எழும் ஞாயிறு” என்பதாகும்.

ஒரு ஆபத்தான காலகட்டத்தில் பெண்ணின் மானம் காப்பாற்றப்பட வேண்டுமென்பதர்க்காக பாஞ்சாலிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய வஸ்த்திரமே பாரத பெண்களின் சேலையாகும். இதை பாரம்பரியம் மிக்க பெண்கள் ஸ்ரீ கிருஷ்ண ப்ரசாதமாகவும், சேலை அணிவதை கவுரவமாகவும் பின்பற்றி வருகின்றனர். எத்தகைய சேலையை உடுத்துவதால் ஸ்ரீ கிருஷ்னரின் அருள் கிடைக்கும் என நம்மவர்கள் நம்புகிறோமோ, அத்தகைய சேலையானது மதம் சார்ந்ததா? அல்லது மதசார்பற்றதா? என்பதை நாம் சிந்திக்கும் நிர்பந்தம் உள்ளது.

சிவ பெருமான் புட்டிர்க்கு மண் சுமந்த சம்பவம் தமிழர்களாகிய நாம் மறக்க, மறுக்க முடியாத ஒன்றாகும். அது போல குசேலன் அன்போடு அவல் கொடுத்ததை ஸ்ரீ பகவான் ஆசை தீர உட்கொண்டார். இத்தகைய புட்டு, அவல், மோதகம் போன்ற உணவுகள், சரஸ்வதியின் இசை, தன்வந்த்ரி பகவானின் வைத்திய சாஸ்த்திரம், பதஞ்சலி முனிவர் அருளிய யோக சாஸ்த்திரம் போன்றவை மதம் சார்ந்ததா? அல்லது மதசார்பற்றதா? இந்த உன்னதத்திர்க்கு உரிமைப் பட்டவர்கள் யார்? என்பதை நாம் உணர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *